தைராய்டு நோயின் அறிகுறிகள்:மருத்துவம்:
தைராய்டு மிகையான நோயின் அறிகுறிகள்: • வீங்கிய தைராய்டு சுரப்பி (காய்டர்) • துருத்திய கண்கள் (முண்டகக்கண், முண்டகம் தாமரை) • துரிதமான இருதயத் துடிப்பு (டேகிகார்டியா) • ஏடை குறைவு • கிறுகிறுப்பு • கைகள் நடுக்கம் • மிகையான வியர்வை தைராய்டின் மந்தமான நோயின் அறிகுறிகள்: • மந்தமான வளர்சிதை மாற்றம். • தடைப்பட்ட வளர்ச்சியம் முதிர்ச்சியும். • மந்தமான மனநிலை • சருமத்தின் சிலாகங்களின் வீக்கம் மற்றும் பல நோய்கள் குழந்தைப் பருவத்திலேயே தைராய்டு சுரப்பி மந்தமாகப் பணி புரிந்தாலோ அல்லது சுரப்பி சுருங்கி விட்டாலோ அந்த நிலையை கிரிடினிஸம் (அறிவுச்சோர்வு, மடமை) என்கிறோம். மருத்துவம்: மூலிகைகளும் பயன்படுத்தும் அளவும்:
1. மந்தாரப் பட்டை 100 கிராம்
2. வேங்கைப் பட்டை 100
3. மாவிலிங்கம் வேர் 50
4. கடுக்காய்த் தோல் 50
5. தான்றிக்காய்த் தோல் 50
6. நெல்லி வற்றல் 50
7. சுக்கு 50
8. மிளகு 50
9. திப்பிலி 50 மேற்கண்ட மூலிகைகள் அனைத்தையும் சுத்தம் செய்து, தனித்தனியாக உலர்த்தி, தனித்தனியாக இடித்து வஸ்திரகாயம் செய்து பின்னர் சம அளவாய் ஒன்று சேர்த்து நன்றாகக் கலந்து, ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு, தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டால் தைராய்டு கோளாறு நிவர்த்தியாகும். மேற்கண்ட மூலிகைகளோடு மற்ற உறுப்புகளின் செயல்பாடு, ஹீமோகுளோபின் அளவு, ஜீரண மண்டலத்தின் செயல்பாடு மற்றும் மலச்சிக்கல் போன்ற உபாதைகள் உள்ளனவா எனக் கவனித்து, தேவை ஏற்பட்டால் அவற்றிற்குத் தகுந்த மூலிகைகளையும் சேர்த்துக் கொடுத்தால் முழுமையான குணம் பெறலாம். மேற்கண்ட மருந்தோடு முறையான உணவும், யோகாசனப் பயிற்சியும் செய்து வந்தால் விரைவான குணம் கிடைக்கும். இதற்கு நல்ல பலன் தருகிறது. >
No comments:
Post a Comment